கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Photo of author

By Vinoth

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Vinoth

Today is a holiday for schools and colleges due to heavy rain!!

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வருகிற நான்கு தினங்களுக்கு வட தமிழக கடலோர  மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழையை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.