இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்!

0
96

காரைக்கால் சுந்தராம்பாள், கைலாசநாதர், திருக்கோவிலில் வருடந்தோறும் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 9ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ஆம் தேதி வெள்ளி ரிஷபத்தில் சகோபுர வீதியுலா நடந்தது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் தேரோட்டமும், வரும் 20ஆம் தேதி தெப்ப உற்சவமும், 23ஆம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும், நடைபெறவிருக்கிறது.

ஆகவே கைலாசநாதர் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில் ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Previous articleபஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற பகவந்த் மான்! மத்திய அமைச்சர் முன்வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு!
Next articleஒன்றிணைந்து பணியாற்றுவோம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!