பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற பகவந்த் மான்! மத்திய அமைச்சர் முன்வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு!

0
63

சமீபத்தில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியது. அதிலும் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக இருக்கக்கூடிய உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்டது.

அந்த வகையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவை சார்ந்த பல வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து கொண்டிருந்த பஞ்சாப் மாநிலத்தில் அந்த மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியை மிகவும் பலமாக இருக்கிறது என்று பாஜக கணித்து வைத்திருந்தது. ஆனாலும் பாஜகவின் இந்த கணிப்பு பலிதமாகவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி அந்த கட்சியினர் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் கூட அங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் கட்சி வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி தற்போது முதல்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இது பாஜகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அந்தவகையில் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மியை சார்ந்த பகவந்த் மான் பொறுப்பேற்றார். பஞ்சாப் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

நேற்று நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழா புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் அவர்களின் சொந்த கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக மிகப் பெரிய அளவில் நிதி செலவழிக்கப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்போது பகத்சிங்கின் பூர்விக கிராமத்தில் பதவியேற்பு விழாவை நடத்தி இருப்பதன் மூலமாக ஆம் ஆத்மியின் மக்கள் சார்பு தன்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்காக பெரிய அளவிலான பணத்தை தவறாக செலவழித்திருக்கிறார்கள் இந்த பிரமாண்ட விழாவுக்காக விவசாயிகளின் பயிர்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.

மேலும் தலைநகர் டெல்லியிலும் அந்த கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் இதன் காரணமாகத்தான் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அந்த கட்சியை பொதுமக்கள் முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார்.