இன்று இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளையே முடங்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய தினங்கள் மற்றும் விழாக்கள் என்றால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவது வழக்கம்தான்.
அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஏப்ரல் எட்டாம் தேதி பணி நாளாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை பொதுத்தேர்வு மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி வரும் மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.