அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று அதிக வெற்றிகள் தேடித் தரும்.நண்பர்களால் நன்மைகள் உண்டு.பொறுமையாக யோசித்து முடிவு எடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்.கல்விகளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே இந்த நாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.சகோதர்கள் மீது அதிக அக்கறை கொள்வீர்கள்.நிலம் சம்மதமான பிரச்சனைகள் உண்டாகும்.தொழில்களில் வெற்றிகள் குவியும்.மனகலக்கங்கள் ஏற்படும் நாளாக அமையும்.குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே வியாபாரம் சம்மதமாக வெளிநாட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.குடும்பங்களில் மகிழ்ச்சி உண்டாகும்.புதிய வேலைவாய்புகள் கிடைக்கும்.வேலைக்கார்களிடம் தேவை இல்லாத வம்புகளை மேற்கொள்ள வேண்டாம்.பல நாளாக உடம்பில் இருக்கும் வியாதிகள் குணமாகும்.

கடகம்:

கடக ராசி அன்பர்களே நீங்கள் செய்யும் வேலைகளில் ஏற்படும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு அதிகமாக தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றும்.அதை மறந்து நல்ல எண்ணங்களை மனதில் நினைக்க வேண்டும்.வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.வீட்டில் பெரியவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களே இந்த நாள் உங்களுக்கு அதிக வெற்றிகளை அள்ளித்தரும் மனகலக்கங்கள்,மன கஷ்டங்கள் அகலும் நன்னாள்.மிக சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள்.குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் கூற வேண்டாம்.கணவன் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இந்த நாளானது உயர் அதிகாரிகளால் நன்மை பெருகும்.பிரிந்த சொந்தங்கள் மீண்டும் சேரும் மகிழ்ச்சியான நாள்.வீட்டின் மூத்த பெண்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு நடந்தால் அதிக வெற்றிகள் கிடைக்கும்.அலங்காரம் செய்யாத அம்மனை நீங்கள் வழிபட்டால் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் வெற்றிகளை குவித்துக் கொண்டே இருப்பீர்கள்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே நல்ல வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்கும்.சமூதாயத்தில் நல்ல புகழ் உண்டாகும்.தன பிரச்சனைகள் தீரும்.அதிக அளவு பொருள் வரவுகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் தொட்ட காரியம் நிறைவேறும். பொருளாதர வாரியாக நன்மைகள் கிடைக்கும்.நண்பர்களால் அதிக அளவு நன்மை கிடைக்கும்.தொழில்துறையினர் அதிக அளவு ஏற்றத்தை காண்பீர்கள்.உங்கள் உடல் நலத்தில் அதிக அளவு அக்கறை காட்டுவது நல்லது.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.அதிக அளவு தியானம் செய்து மனதை ஒருநிலை படுத்த வேண்டும்.இந்நாளில் பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.தொலைத்தூரத்திலிருந்து நல்ல செய்திகள் உங்களை தேடி வரும் நன்னாள்.

மகரம்:

மகர ராசி அன்பர்களே எதிர்பார்க்கின்ற காரியங்கள் நடைபெறும் நன்னாள்.அரசியல்வாதிகள் நினைத்தது நடைபெறும் அதிஷ்டமான நன்னாள்.கடன் வாங்கி இருப்பவர்கள் இன்று நீங்கள் உங்கள் கடன்களை அடைப்பீர்கள்.வீடு மனைகள் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே உடல் நலத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு நன்மை பயக்கும்.தொழில்துறையில் அதிக அளவு வெற்றிகள் கிடைக்கும்.குடும்பத்தில் அதிக அளவு மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

மீன ராசி அன்பர்களே தங்களின் உடல் நலத்தில் அக்கறைக் கொள்ள வேண்டும்.நண்பர்களால் உங்களுக்கு நற்செய்திகள் உண்டாகும்.தனம் வருமானம் பெருகும் நன்னாள்.குடும்பத்தில் அமைதி உண்டாகும்.