இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள்  தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!!

Photo of author

By Jeevitha

இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள்  தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!!

நாடு முழுவது  தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இந்த தினம் மருத்துவர்களின் சேவை, கடமை, செயல்பாடுகள் மற்றும் அவர்களின் பொறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்நாள் வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை இணைத்து  மருத்தவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவர் மகாத்மா கத்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். மேலும் இவர் மருத்துவம் மட்டுமல்லாமல் சுகந்திர போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் .

உலகின் பல நாடுகளில் மார்ச் 30 ஆம் தேதி மருத்துவர்கள் தினாமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஜூலை 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களின் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். அதனால்  இந்நாள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும்  அர்ப்பணிக்கப்படுகிறது.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில் ஏழை மக்களுடன்  அன்போடும் மற்றும் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்து, வங்காள முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாள் இன்று தேசிய மருத்துவர்கள்  தினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.