இன்று தான் கடைசி நாள்..! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

0
149

நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் முடிவடைகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான (2020 – 2021) மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3.08 லட்சம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3.66 லட்சம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1.04 லட்சம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4.14 லட்சம் மாணவர்களும் நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள், பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு!
Next articleஅரியர் தேர்ச்சி விவகாரம்! தமிழக அரசின் அரசாணை யுஜிசி விதிகளுக்கு புறம்பானது..! ஏஐசிடிஇ பதில்!