இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி !!

Photo of author

By Sakthi

இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி
கூகுள் நிறுவனம் நாளை முதல் அதாவது டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை முடக்கவுள்ளதால் அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தியை  கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் அனைத்தையும் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அனைத்தையும் முடக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி நாளை(டிசம்பர்1) முதல் கூகுள் நிறுவனம் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அனைத்தையும் முடக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி கூகுள் நிறுவனம் நாளை முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் கூகுள் கணக்குகள், ஜி மெயில் கணக்குகள், யூடியூப் கணக்குள் அனைத்தையும் நீக்க முடிவு செய்துள்ளது. இந்த பணி நாளை முதல் தொடங்கவுள்ளதால் கூகுள் நிறுவனம் கூகுள் கணக்கு வைத்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் இது தொடர்பான மயிலை அனுப்பி வருகின்றது.
எனவே கூகுள் கணக்கு வைத்துள்ள அனைத்து கூகுள் பயனாளர்களும் ஒரு முறையாவது கடவுச்சொல்லை பயன்படுத்தி கூகுள் கணக்கில் உள்நுழைந்து தங்கள் கூகுள் கணக்குகளை காப்பாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. இன்று(நவம்பர்30) கடைசி தினம் என்பதால் அனைத்து பயனர்களும் தங்கள் கூகுள் கணக்குகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.