பட்ஜெட் விலையில் ரெட்மி  அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்! இதில் இத்தனை சிறப்பம்சங்களா !!

0
113
#image_title
பட்ஜெட் விலையில் ரெட்மி  அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்! இதில் இத்தனை சிறப்பம்சங்களா
ஸ்மார்ட்போன் நிறுவன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் பல சிறப்பு அம்சங்கள் அடங்கி உள்ளது.
இந்தியாவில் 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை தொடர்ந்து தற்பொழுது 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் விரிவடைந்து வருகின்றது. இந்நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு அதிகளவில் கிடைத்து வருகின்றது. இந்நிலையில் ரெட்மி  நிறுவனம் பட்ஜெட் விலையில் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள இந்த புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் டிசம்பர் 6ம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்…
* ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது.
* ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹெலியோ ஜி85 சிப்செட் வசதியை கொண்டுள்ளது.
* இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் மாலி ஜி52 ஜிபியு உள்ளது.
* இந்த புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் போன்ற மூன்று வகைகளில் கிடைக்கவுள்ளது. மேலும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி இண்டர்னல் மெமரி வசதியை கொண்டுள்ளது.
* புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 13 ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் எம்.ஐ.யு.ஐ 14 வசதியுடன் அறிமுகமாகவுள்ளது.
* புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி எடுக்க 8 மெகா பிக்சல் வசதி கொண்ட முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
* மேலும் போனின் செக்யூரிட்டியை பலப்படுத்தும் விதமாக ஏ.ஐ பேஸ் லாக் வசதியும், பக்கவாட்டில் அதாவது சைடில் கை ரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது.
* மேலும் இந்த புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
* புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், க்ளாசியர் வொயிட், நேவி ப்ளூ, க்ளோவர் கிரீன் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றது.
* புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் ஆரம்ப வேரியன்டின் விலை அதாவது 4 ஜிபி ரேம் மற்றும் 128 கிபி இண்டர்னல் மெமரி வசதி கொண்ட பைட் 12000 ரூபாய்க்கு கிடைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
Previous articleஇன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி !!
Next articleஒரு லட்சம் ரேசன் அட்டைகள் அச்சடிக்காமல் நிறுத்தி வைப்பு!! குமுறும் விண்ணப்பதாரர்கள்.. செவி சாய்க்குமா தமிழக அரசு..!!