இன்றே கடைசி நாள் நல்ல ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Photo of author

By Jeevitha

இன்றே கடைசி நாள் நல்ல ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழக அரசு மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தமிழகத்தில் மாணவர்களின்  அறிவியல் சார்ந்த அறிவுகள்  மற்றும் பொது அறிவை மேம்படுத்த கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை  ஊக்கப்படுத்த வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களை மேம்படுத்த ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள், மாணவர்களின் அறிவை வடிவமப்பைது, கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பது உங்கள் கையில் உள்ளது என்றும் ஆசிரியர்கள் நினைக்கிரறாக்கள். மேலும் அவர்களை சிறப்பிக்கும் வகையில்  விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டப்பட உள்ளது. மேலும் அவர் பிறந்த நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டப்பட்டு வருகிறது.’ அதனை தொடர்ந்து இந்த நாளில் பாடம் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விருது பெற ஆசிரியர்கள் இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிதிருந்தது. அந்த நிலையில் கால அவகாசம் ஜூலை 30 ஆம் தேதி உடம் முடிவடைந்தது. அதன் பின் தற்போது கால அவகாசம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பள்ளி ஆசிரியர்கள், பாலிடெக்னிக், ஐடியை  மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று உடன் கால அவகாசம் முடிவடைகிறது.