ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இன்றே கடைசி நாள் மிஸ் பண்ணிராதிங்க!!

Photo of author

By Sakthi

Aadhaar card: ஆதார் கார்டில் இலவச திருத்தம் செய்து கொள்ள இன்றே கடைசி நாள் ஆகும்.

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடி மக்களும் வைத்து இருக்க வேண்டிய மிக முக்கியமாக ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு ஆகும். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை மற்ற ஆணவங்களை பெறுவதற்கு ஆதார் பயன்படுகிறது. மேலும், ஓட்டுரிமை பெற, வாங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கான அடிப்படை ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது.

 இந்த ஆதார் கார்டு வைத்து இருக்கும் நபரின் புகைப்படம், பெயர், இருப்பிடம், பிறந்த தேதி,தொலைபேசி எண் என முக்கிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும், அந்த நபரை அடையாளப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நபரின் கண், கைரேகை முதலியவை ஸ்கேன் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் “கியூ ஆர் கோர்ட்” உருவாக்கப்பட்டு இருக்கும்.

இந்த “கியூ ஆர் கோர்டு  ஸ்கேன்” செய்வதன் மூலம் ஆதார் கார்டு வைத்திருக்கும் நபரின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்தியாவில் ஆதார் கார்டு என்பது இந்தியர்களின் அடையாளமாக இருக்கிறது. இந்த நிலையில் ஆதார் கார்டு பெற்று பல வருடங்கள் ஆகியும் பலர் அதில் தற்போது இருக்கும் சுய விவரங்களை புதுப்பிக்காமல் இருக்கிறார்.

எனவே, ஆதாரை புதுப்பிப்பதற்காக   இலவச சேவையை அறிவித்து இருந்தது மத்திய அரசு. அதன் அடிப்படையில் எவ்வித கட்டணமும் இன்றி ஆதாரில் முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கான கால அவகாசம் இன்று டிசம்பர்-14 உடன் முடிவடைகிறது.