வதந்திகளை நம்பாதீங்க! பாஜக தலைமை அதிரடி!

0
136

எதிர்க்கட்சியான திமுக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவை விட தாமதமாக தான் ஆரம்பமானது. ஆனாலும் அந்த கட்சியில் தற்போது வரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது சுமூகமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே தேர்தல் வேலைகளை தொடங்கிய அதிமுகவில் இன்றுவரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இழுபறியாகவே இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேமுதிக, பாஜக, என்று முக்கிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் பிரச்சனைகள் மேலோங்கிய நிலைதான் இன்று வரையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பாஜக ஆர்வம் காட்டி வருவதால் அதனை ஏற்க மறுத்து அந்த விஷயத்தில் உறுதியாக இருக்கின்றது அதிமுக.

ஆனாலும் சமீபத்தில் சென்னை வந்த அமைச்சர் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து எவ்வளவோ பேசிப் பார்த்தும் அதிமுக தரப்பில் எந்த ஒரு நல்ல முடிவு எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க பாஜகவின் மாநில தலைவர் முருகன் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் நாங்கள் தலையிட முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

சரி இதில் என்ன தான் பிரச்சனை என்று கேட்டோம் ஆனால் அதிமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக இருக்கின்றது அதனை பலவீன படுத்துவதற்காகவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற சதி வலைகளை பின்னி வருகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும் என்னதான் சதி செய்தாலும் அதிமுகவின் கூட்டணியை யாராலும் உடைத்து விட இயலாது என்று உறுதியாக சொல்கிறார்கள்.

தேர்தல் முடியும் வரை எவ்வளவு சிக்கல் வந்தாலும் அத்தனையும் தவிடுபொடியாக்கி நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் என்று அதிமுகவின் நிர்வாகிகள் அனைவரும் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் அமித்ஷா முதல்வர் மற்றும் துணை முதல்வரை மிரட்ட ஆரம்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இதனை பாஜகவின் தலைமை அறவே மறுத்து இருக்கின்றது. எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு எங்கு செய்யப்பட்டுவிடும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அந்தக் கட்சியின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஅசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!
Next articleதொகுதி பங்கீட்டில் திமுக காட்டிய கறார்! கூட்டணியை விட்டு விலகிய முக்கிய கட்சி அதிர்ச்சியில் ஸ்டாலின்!