இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

Photo of author

By Kowsalya

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது.

இந்த விரதத்தை முழுமையாக கடைபிடிக்க அந்த அன்னை மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு வருவாள்.மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும். இன்று ஜூலை 31 ஆம் தேதி வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இன்று துளசி பூஜை மற்றும் லக்ஷ்மி பூஜை செய்யவும் ஏற்ற நாள்.

வேண்டியதை வேண்டியவாறு அருளும் மகாலட்சுமிக்கு நீங்கள் விரதம் இருந்து முறையை கடைபிடித்தால் சகல சவுபாக்கியம் மற்றும் மாங்கல்ய பாக்கியமும் கிட்டும்.

அம்பாள் உங்கள் வீட்டிற்கு வர என்னவெல்லாம் கடைபிடிக்க வேண்டும்

1.வரலட்சுமிக்கு முந்தின நாளே அதாவது வியாழக்கிழமை வீடு வாசல் அனைத்தையும் சுத்தம் செய்து சாணத்தால் மொழுகி கோலமிட்டு, மா தோரணம் கட்ட வேண்டும்.வீட்டின் தெற்கு இடத்தில் ஒரு சின்ன பகுதியில் சாணமிட்டு மொழுகி ஒரு வாழை இலையை விரித்து அதில் ஒரு படி பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும் வைக்க வேண்டும்.

2. ஒரு பித்தளை அல்லது வெள்ளி செம்பில் அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு ,நாணயம், எலுமிச்சை பழம், கருகமணி ஆகிய அனைத்தையும் போட வேண்டும். செம்பில் மாவிலை வைத்து அதன்மேல் தேங்காயை வைக்க வேண்டும்.வேண்டிய அனைத்துக் காரியமும் தடை படாமல் அருள்வாய் என வேண்டிக் கொண்டு தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திருமுகத்தை வரைய வேண்டும்.

3. அம்மனின் முகம் சந்தனம் அல்லது வெள்ளியால் வரையப்பட வேண்டும். வாசலுக்கு அருகில் அம்மனை முதல் நாள் வைக்க வேண்டும். பிறகு அடுத்த நாள் வரலட்சுமி வரும் நாள் என்பதனால் வரலட்சுமியை வேண்டி “எங்களுடைய இல்லத்தில் எழுந்தருளி ஐஸ்வரியங்களையும் தருவாய் அம்மா” என்று வணங்கி அம்மனை கிழக்கு முகம் நோக்கி அமர வைக்க வேண்டும்.

4. பூஜை செய்யும்பொழுது வடக்கு பார்த்து அமர வேண்டும். நோன்பு கயிறு மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூக்கள் மற்றும் தீபங்களால் அம்மனை அலங்காரம் செய்ய வேண்டும்.மஞ்சள் சரடை மிகவும் பக்தியுடன் உங்களது கணவர் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலி கைகளில் கொடுத்து வலது கைகளில் கட்டிவிட சொல்லவேண்டும்.

5. சரடை கட்டிய பெண் அவர்களது காலில் விழுந்து வணங்க வேண்டும். பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு கட்டிவிட வேண்டும்.சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் இவற்றை படைக்க வேண்டும்.

6.சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, எலுமிச்சை, இனிப்பு, பழம் மற்றும் ஒரு ரவிக்கைத்துணி ஆகியவற்றை தாம்பூலம் ஆக சேர்த்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு இந்த விரதத்தினை தொடர்ந்து கடைபிடிப்பவர்கள் அம்பாளின் ஆசியோடு தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதாலும் தாம்பூலம் வாங்குபவர்களும் மகாலட்சுமியின் ஆசியை பரிபூரணமாக பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.

பூஜை செய்த அன்று மாலையோ அல்லது காலையோ அம்மனுக்கு எளிமையான பூஜைகள் செய்துவிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பூஜையில் வைத்த தேங்காய் மற்றும் அரிசியை அடுத்த நாள் பாயாசம் செய்த படைக்க வேண்டும்.