gold price: இன்று, ஜனவரி-2 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,440-க்கு விற்பனையாகிறது.
கடந்த வருடம் 2024-ல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர்-31 அன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,880 ஆக விற்பனையாகிறது. இந்த நிலையில் 2025 புத்தாண்டின் முதல் நாளான நேற்று, ஜனவரி-1 ஆம் தேதி ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. வருடத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்து இருந்தால் நகை வாங்குவோர் பாதிப்படைந்தவர்கள்.
இந்த நிலையில் இன்று, ஜனவரி-2 ஆம் தேதி மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,180க்கும் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,440க்கு விற்பனையாகி வருகிறது. புத்தாண்டு தொடங்கி இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து இருக்கிறது. இதனால் நகை பிரியர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
வெள்ளி விலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையா வெள்ளி. இன்று ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கு, ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் முதலிட்டில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
எனவே, உலக அளவில் தங்கம் வர்த்தகத்தில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.