விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Photo of author

By Sakthi

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது.

இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை  தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில்  மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது,  கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது.

(டிசம்பர்- 10) ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,205க்கு விற்பனை ஆனது, ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு சவரன் தங்கம் ரூ. 57,640 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று, தங்கம் விலை டிசம்பர்-11 அதிரடியாக ஒரு  கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,285-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,280-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று டிசம்பர்-12 தங்க விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஒரு பவுன் ரூ.58,280க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த தினங்களில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து இருந்தது. நேற்று  ஒரு கிராமுக்கு  ரூ.1 குறைந்தது. ஆனால் மீண்டும் இன்று, ஒரு கிராமுக்கு  ரூ.1 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.

எனவே, வெள்ளி ஒரு கிராம்  ரூ.104-க்கு, ஒரு கிலோ வெள்ளிக்கு 1000 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாயாக  விற்பனையாகி வருகிறது.