gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.56,880-க்கு விற்பனையாகி வருகிறது.
2024 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.59 ஆயிரமாக உயர்ந்தது. நகை பிரியர்கள் எப்போது தங்கம் விலை குறையும் ஏற்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அதன் பிறகு நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் சற்று விலை குறையத் தொடங்கியது. அதாவது, டிசம்பர்-19 அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது. மேலும், விலை குறைந்து டிசம்பர்-20 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையானது.
இந்த நிலையில் டிசம்பர்-25 க்கு பிறகு விலை ஏறத் தொடங்கியது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,000க்கு விற்பனையானது. டிசம்பர்-28 தங்கம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080க்கும் விற்பனையானது. நேற்று விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நேற்று , டிசம்பர்-30 ஒரு கிராமுக்கு ரூ.15 அதிகரித்து. ஒரு கிராம் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று டிசம்பர்-31 அன்று ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,110க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,880 ஆக விற்பனையாகிறது. இன்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.98 க்கு. ஒரு கிலோ வெள்ளி ரூ. 98,000க்கு விற்பனையாகிறது.