தமிழகத்தில் மிக விரைவில் தேர்தல் வரவிருக்கும் அதன் காரணமாக, தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சியான திமுக எதிர்கட்சியான திமுக என்று அனைத்து தரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது.அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.அதிமுக சார்பாக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சியின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியில் சுமார் 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக டெல்லி தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த அறையில் தாராபுரத்தில் களம் காணும் தமிழக பாஜகவின் தலைவர் முருகனை ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது இதற்காக இன்று காலை கோயமுத்தூர் வரும் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்குச் சென்று அங்கே பிரச்சாரம் செய்கின்றார்.
அதன்பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வந்து சேரும் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் ஒரு மணி முதல் 130 மணி வரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி போகும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடக்கும் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது