இன்றைய ராசி பலன் 26-08-2020 Today Rasi Palan 26-08-2020

0
50

இன்றைய ராசி பலன்- 26-08-2020

நாள் : 26-08-2020

தமிழ் மாதம்: 

ஆவணி 10, புதன்கிழமை

நல்ல நேரம்: 

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 12.00 முதல் 1.30 வரை.

 எம கண்டம்:

காலை 7.30 முதல் 9.00 வரை.

குளிகன்:

மதியம் 10.30 முதல் 12.00 வரை,

திதி:

அஷ்டமி திதி பகல் 10.40 வரை பின்பு வளர்பிறை நவமி.

நட்சத்திரம்:

அனுஷம் நட்சத்திரம் பகல் 01.04 வரை பின்பு கேட்டை.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஜேஷ்டா விரதம். கேதாரவிரதம் ஆரம்பம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உள்ளவர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிட நேரிடும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் குறையும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நெருங்கியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் திடீர் வெளியிட பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பணபிரச்சினை குறையும். எதிலும் நிதானம் தேவை.

author avatar
Kowsalya