இன்றைய ராசி பலன் 14-09-2020 Today Rasi Palan 14-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 14-09-2020

நாள் : 14-09-2020

தமிழ் மாதம்:

ஆவணி 29, திங்கட்கிழமை.

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

பகல் 7.30 முதல் 9.00 வரை.

எம கண்டம்: 

மதியம் 10.30 முதல் 12.00 வரை.

குளிகன்:

காலை 1.30 முதல் 3.00 வரை,

திதி:

துவாதசி திதி பின்இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.

நட்சத்திரம்:

பூசம் நட்சத்திரம் பகல் 03.52 வரை பின்பு ஆயில்யம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் கவலைகளை மறக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் அகலும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாதது போன்ற உணர்வு இருக்கும். சிந்தனை முழுவதும் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றியில் முடியும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் ராசிக்கு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். எதிர்பாராத சில விஷயங்கள் மனமகிழ்ச்சியை தரும். சுய தொழில் புரிபவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பார்கள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியம் கைகூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் இல்லத்தில் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவு ஒரு சிலருக்கு கிடைக்கப் பெறும். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் எதிர்பாராத விதமாக பண வரவு உண்டாகும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். குடும்ப விஷயங்களைப் பற்றி அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்த பின் எடுப்பது நல்லது. வங்கி கடன் தொடர்பான விஷயத்தில் சாதகமான பலன் அமையும்.