தொடரும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!!

0
150

தொடரும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!!

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் நாமக்கல் நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருச்சி திருவாரூர் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மீதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleதொங்கும் பாலம் அறுந்து விழுந்த விபத்து: 9 பேர் கைது! 141 ஆக உயிரிழப்பு அதிகரிப்பு!
Next articleதொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!