இன்றைய ராசி பலன் 20.08.2020 Today Rasi Palan 20-08-2020

0
108

இன்றைய ராசி பலன்- 20.08.2020

நாள் : 20.08.2020

தமிழ் மாதம்: 

ஆவணி 4, வியாழக்கிழமை.

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மதியம் 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 1.30 முதல் 3.00 வரை.

 எம கண்டம்:

காலை 6.00 முதல் 7.30 வரை.

குளிகன்:

பகல் 9.00 முதல் 10.30 வரை,

திதி:

துதியை திதி பின் இரவு 02.13 வரை,பின் வளர்பிறை திரிதியை.

நட்சத்திரம்:

இன்று பூரம் நட்சத்திரம் இரவு 11.50 வரை பின் உத்திரம்.

சித்தயோகம் இரவு 11.50 வரை பின்பு மரணயோகம் ஆகும். நேத்திரம் 0. ஜீவன் 0. சந்திர தரிசனம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்கள் பல புதிய வழிகளைக் காண்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலக்கை அடைவீர்கள்.மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். சொத்துக்கள் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புத்திர வழியில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவார்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், குடும்ப அமைதியை நிலை நாட்டுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது, புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது, புதிய வேலைக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைத்தால் நல்லது. குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் என்றாலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து குணத்தை அதிகப் படுத்திக் கொள்ளவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

 

 

author avatar
Kowsalya