இன்றைய ராசி பலன் 03-09-2020 Today Rasi Palan 03-09-2020

0
65

இன்றைய ராசி பலன்- 03-09-2020
நாள் :  03-09-2020
தமிழ் மாதம்:
ஆவணி 18, வியாழக்கிழமை.
நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மதியம் 12.15 மணி முதல் 1.15 மணி வரை.
இராகு காலம்:
மதியம் 1.30  முதல் 3.00 வரை.
எம கண்டம்:
காலை 6.00 முதல் 7.30 வரை.
குளிகன்:
பகல் 9.00 முதல் 10.30 வரை,
திதி:
பிரதமை திதி பகல் 12.27 வரை பின்பு தேய்பிறை துதியை.
நட்சத்திரம்:
பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.51 வரை பின்பு உத்திரட்டாதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றியை தரும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இன் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் இடம் இருந்து நல்ல செய்திகள் வரும். தொழிலில் உடன் இருப்பவர்களிடம் நட்பு அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே  இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு பகல் 02.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.14 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். எந்த வேலை செய்தாலும் காலதாமதம் உண்டாகும். உத்யோகத்தில் எந்த புது முயற்சிகளையும் எடுக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களிடம் தேவையற்ற பேச்சை குறைக்கவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்

துலா  ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக உள்ளதால் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி பெருகும். விடாமுயற்சியால் எதிர்பார்த்த லாபத்தை உத்யோகத்தில் பெறுவீர். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பெரியவர்களின் அன்பே பெருவீர். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்யகத்தில் லாபம் காண்பீர். புதிய சொத்துக்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். சேமித்து வைக்கும் அளவுக்கு லாபம் பெருகும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சில இடையூறுகள் ஏற்படலாம். வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு உத்தியோகம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர். வெளியூர் பயணங்கள் வெற்றியை தரும். உடல்நலம் சீராக இருக்கும். தொழிலில் புதிய நபர் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு. சுபகாரிய நிகழ்ச்சிகள் நல்ல பலன் கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே  இன்று உங்களுக்கு குடும்பத்தில் மன உளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

author avatar
Kowsalya