இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் பயணங்களில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 28-09-2020 Today Rasi Palan 28-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 28-09-2020

நாள் : 28-09-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 12, திங்கட்கிழமை,.

நல்ல நேரம்: 

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

காலை 7.30 முதல் 9.00 வரை.

எம கண்டம்: 

பகல் 10.30 முதல் 12.00 வரை.

குளிகன்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை,

திதி:

துவாதசி திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.

நட்சத்திரம்:

அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.38 வரை பின்பு சதயம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் அதிகம் கவனத்துடன் இருங்கள். பயணங்களின் பொழுது தங்களின் உடைமைகளையும், பணத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் லாபத்தில் குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உங்கள் ராசிக்கு காலை 9.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் மதியத்திற்கு பின் தொடங்குவது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 9.41 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. முடிந்த வரை பயணங்களை தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் பேசும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. பேச்சில் கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவது நல்லது. கணவன் மனைவி இடையேயான உறவு சிக்கலில் இருந்து மீளும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயத்தில் ஏமாற வாய்ப்பு உண்டு. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் காணலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்ககூடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் கலைத்துறை மற்றும் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கப் பெறும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்து காணப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பால் மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.