இன்றைய ராசி பலன் 05-09-2020 Today Rasi Palan 05-09-2020

0
62

இன்றைய ராசி பலன்- 05-09-2020

நாள் : 05-09-2020

தமிழ் மாதம்:

ஆவணி 20, சனிக்கிழமை.

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

பகல் 9.0 முதல் 10.30 வரை.

எம கண்டம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

குளிகன்:

காலை 6.00 முதல் 7.30 வரை,

திதி:

திரிதியை திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.

நட்சத்திரம்:

ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.21 வரை பின்பு அஸ்வினி.

பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். விநாயகரை வழிபடுவது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் குறையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். பைரவர் வழிபாடு செய்து வந்தால் மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் இழப்புகளை தவிர்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது மிகவும் நல்லது. ஒரு சில தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. முருக வழிபாடு செய்வது ஏற்றம் தரும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களின் முன் கோபத்தை குறைத்துக்கொள்வது மிக மிக நல்லது. தேவையற்ற வீண் வாக்குவாதங்களால் மன சங்கடங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு லாபம் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிட நேரிடும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்கள் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இனிய சுபகாரியங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

 

 

 

 

 

author avatar
Kowsalya