இன்றைய ராசி பலன் 07-09-2020 Today Rasi Palan 07-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 07-09-2020

நாள் : 07-09-2020

தமிழ் மாதம்: 

ஆவணி 22, திங்கட்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை.

இராகு காலம்: 

காலை 7.30 முதல் 9.00 வரை.

எம கண்டம்: 

பிற்பகல் 10.30 முதல் 12.00 வரை.

குளிகன்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை,

திதி:

பஞ்சமி திதி இரவு 09.39 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.

நட்சத்திரம்:

நாள் முழுவதும் பரணி நட்சத்திரம் .

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. மஹா பரணி

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் புதிய உத்வேகத்துடன் செயல்படக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு நிம்மதியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்றத்தை தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் முற்றிலும் நீங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேற அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளுவால் உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களின் முன்கோபத்தால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் மன அமைதி பெறலாம். மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்கு உரிய சந்தர்ப்பம் இது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் ஓரளவுக்கு சுமாரான அமைப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கால தாமதம் ஏற்படும். மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலையில் மன சஞ்சலங்கள் உருவாகக்கூடும். எதிலும் நிதானமும், பொறுமையும் கையாள்வது மன அமைதியை உங்களுக்கு கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் எந்த விஷயத்தையும் தீர விசாரிக்காமல் முடிவெடுக்கக் கூடாது. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்கிற பழமொழி உண்மை என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதியுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். பொருளாதார ரீதியான சிக்கல்களை எளிதில் சமாளித்து விடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு புதிய தெம்பை கொடுக்கும். எதிர்பாராத நபர்களினால் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.