இன்று இந்த ராசிக்கு கடன்பிரச்சனை தீரும்! இன்றைய ராசிபலன்கள்!!

0
235

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே, புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடை மற்றும் தாமதங்கள் உங்களுக்கு குறையும். மேலும், உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். உறவினர்கள் மற்றும் உற்றார் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மேலும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் நிறம்
மேலும், அஸ்வினி நட்சத்திரத்திற்கு தாமதங்கள் குறையும்.

ரிஷபம்:

இன்று உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் அமையும். மேலும், கால்நடைகள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மேலும், நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் அனைத்தும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் குறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அனைத்தும் அமையும். நீங்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களது புதிய நுட்பமான சிந்தனைகளின் மூலமாக புது விதமான அனுபவங்கள் உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் :5
அதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்

கடகம்:

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். உங்களது உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவின் மூலமாக புதிய நம்பிக்கை மேம்படும். மேலும், மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படுவது நன்மை பயக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் தொடர்பான வேலைவாய்ப்புகள் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
அதிஷ்ட எண் :2
அதிஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே, தன வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் என்று உங்களுக்கு அதிகரிக்கும். மேலும் உடன்பிறந்தவர்களின் மூலமாக அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மேலும், விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை :தென் மேற்கு
அதிஷ்ட எண் :3
அதிஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி:

இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளும் மேலும் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும். பொருள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலமாக நெருக்கடியான சூழ்நிலைகளை உண்டாகும். சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வந்து கைகூடும்.
அதிர்ஷ்ட திசை :வட மேற்கு
அதிர்ஷ்ட எண் :5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

துலாம்:

இன்று உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மேலும், உறவினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் மூலமாக உங்களுக்கு அதிக லாபம் ஏற்படும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.
அதிஷ்ட எண் :6
அதிஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட நிறம் :அடர்பச்சை

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே, இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் அனைத்தும் கிடைக்கும். மேலும், காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மையான வாய்ப்புகள் அமையும். அரசாங்கத்தின் மூலமாக சாதகமான காரியங்கள் அனைத்தும் நடைபெறும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றி புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை :வட மேற்கு
அதிர்ஷ்ட எண் :7
அதிர்ஷ்ட நிறம் :நீல நிறம்

தனுசு:

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை அதிகம் உண்டாகும். மனதில் நீங்கள் நினைத்தவை சில அலைச்சல்களை ஏற்படுத்தினாலும் பின் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களது பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது மனக்குழப்பங்களும், சோர்வும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிஷ்ட எண் :8

மகரம்:

இன்று வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் சிந்தித்து செயல்படுவது நன்மை பயக்கும். எதிர்பாராத வீண் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களுக்காக நீங்கள் எந்த ஒரு பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது மிக நல்லது. சமூகப் பணியில் இருப்பவர்கள் பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கலாம்.
அதிஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் :பிங்க் நிறம்

கும்பம்:

உங்களது ராசியில் எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சாதுரியத்தின் மூலமாக இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கேளிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய நபர்களின் நட்புகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் மற்றும் அது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மேலும் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிஷ்ட எண் :1
அதிஷ்ட நிறம் : இளநீலம்

மீனம்:

மீன ராசிக்காரர்களே, குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் இன்று உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் அனைத்தும் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பாராத உதவிகள் மூலமாக உங்களது இன்னல்கள் அனைத்தும் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும், உடல் ஆரோக்கியம் தொடர்பான உபாதைகள் படிப்படியாக குறையும்.
அதிஷ்ட திசை :தெற்கு
அதிஷ்ட எண் :4
அதிஷ்ட நிறம் :மஞ்சள் நிறம்

Previous articleதிருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!
Next articleதோனியை தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்!