இன்றைய ராசி பலன் 18-09-2020 Today Rasi Palan 18-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 18-09-2020

நாள் : 18-09-2020

தமிழ் மாதம்:

புரட்டாசி 02, வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை.

இராகு காலம்: 

பகல் 10.30 முதல் 12.00 வரை.

எம கண்டம்: 

மதியம் 3.00 முதல் 4.30 வரை.

குளிகன்:

காலை 7.30 முதல் 9.00 வரை,

திதி:

பிரதமை திதி பகல் 12.51 வரை பின்பு வளர்பிறை துதியை.

நட்சத்திரம்:

உத்திரம் நட்சத்திரம் காலை 06.59 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்திரை.

சித்தயோகம் காலை 06.59 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் எதையும் கவனமுடன் செய்வது அவசியமாக இருக்கும். உங்களுடைய மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட இருக்கலாம் என்பதால் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையேயான உறவு சுமூகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களை உதாசீனப்படுத்தும் நபர்கள் முன் ஜெயித்துக் காட்ட கூடிய வாய்ப்புகள் அமையும். எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாய் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தம்பதியருக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைவதில் தாமத பலன் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமாரான லாபம் தான் ஈட்ட முடியும். புதிய யுத்திகளை கையாளுவதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பகைவர்களை எதிர் கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படலாம். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். ஒரு சிலருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகக்கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அமையலாம். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் எதிர்பார்ப்பதெல்லாம் எதிர்பார்த்தபடி நிறைவேறக் கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் நல்லபடியாக நடைபெறும். வாகன வழியில் சிலருக்கு வீண் விரயங்களும் உண்டாகலாம். எதிர்பாராத தனவரவு மன மகிழ்ச்சி புதிய பொருள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.