இன்றைய ராசி பலன் 21-09-2020 Today Rasi Palan 21-09-2020

0
55

இன்றைய ராசி பலன்- 21-09-2020

நாள் : 21-09-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 05, திங்கட்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

காலை 7.30 முதல் 9.00 வரை.

எம கண்டம்:

பகல் 10.30 முதல் 12.00 வரை.

குளிகன்:

பிற்பகல் 12.00 முதல் 1.00 வரை,

திதி:

பஞ்சமி திதி இரவு 11.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

நட்சத்திரம்:

விசாகம் நட்சத்திரம் இரவு 08.48 வரை பின்பு அனுஷம்.

மரணயோகம் இரவு 08.48 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மன உளைச்சல் அதிகமாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.16 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குழந்தைகளுடன் இருந்த கருத்துவேறுபாடு அகலும். தொழிலில் திறமைக்கேற்ப பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் வளர்ச்சிக்காக போட்ட திட்டம் அனைத்தும் வெற்றி கொடுக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். கடன் பிரச்சனை அனைத்தும் குறையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு உண்டாகும். எந்த செயல் செய்தாலும் மந்தமாக இருப்பீர்கள். உறவினர்களால் மனஸ்தாபம் வரக்கூடும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் வீண் பிரச்சினைகளில் இருந்து நீக்கலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு பணவரவு இருந்தாலும் செலவும் கூடும். நண்பர்களால் மன அமைதி குறையும். சுபகாரியங்களில் தடை உண்டாகும்.சிக்கனமாக செயல்பட்டால் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர். தேவையற்ற செலவுகளை குறைப்பது நாள் பிரச்சனைகள் நீங்கும். அரசுத் துறையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார ரீதியில் நட்பு உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு மன தைரியத்துடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் புதிய மாற்றங்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் எளிதில் கிட்டும். தொழிலில் பணி சுமை குறையும்.நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு உண்டாகும். வீட்டில் வீண் பிரச்சனை ஏற்படும். உங்களின் ராசிக்கு பகல் 03. 14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழிலில் புதிய முயற்சிகள் எடுத்தால் மதியத்திற்கு பிறகு மேற்கொள்ளுங்கள் அதுவே வெற்றியை கொடுக்கும்.

 

 

 

 

author avatar
Kowsalya