இன்றைய ராசி பலன் 25.08.2020 Today Rasi Palan 25-08-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 25-08-2020

நாள் : 25-08-2020

தமிழ் மாதம்:

ஆவணி 09, செவ்வாய்க்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 3.00 முதல் 4.30 வரை.

 எம கண்டம்:

காலை 9.00 முதல் 10.30 வரை.

குளிகன்:

மதியம் 12.00 முதல் 1.30 வரை,

திதி:

சப்தமி திதி பகல் 12.22 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

நட்சத்திரம்:

விசாகம் நட்சத்திரம் பகல் 01.58 வரை பின்பு அனுஷம்.

இன்று மரணயோகம் பகல் 01.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று முருக வழிபாடு செய்வது நல்லது. இன்று கரி நாள். இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியை தரும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தினரால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவார்கள். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் சிலருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தயோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.