இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??

Photo of author

By Kowsalya

தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று ரேஷன் கடைகள் திறந்து உள்ளதால் 2000 ரூபாய் நிதியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பரவி ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருவதால் தமிழக அரசு வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லா முழு ஊரடங்கு அறிவித்தது.. ரேஷன் கடைகளிலும் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவித்து இருந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீடியோ ஒன்று வெளியிட்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு மக்கள் ஆதரவு தந்து வீட்டிற்குள்ளேயே இருந்தால் கொரோணா பரவாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

 

திடீரென்று நேற்று மாலை இன்று முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அரசு திடீர் என்று அறிவித்திருந்தது.

 

மேலும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வாங்காதவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கும் ரேஷன் கடைகள் 8 மணி முதல் 12 மணி வரை செயல்பட்டு நிவாரணத்தொகை விநியோகிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 

அதனால் ரேஷன் கடைக்கு செல்லும் பொழுது ரேஷன் கார்டுகளை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தது. 2.09 கோடி அரிசி அட்டை கார்டுதாரர்களில் இன்னும் 7.51 லட்சம் கார்டுதாரர்கள் மட்டும் நிவாரண தொகை வாங்க வேண்டியுள்ளது. சர்க்கரை கார்டுதாரரையும் சேர்த்து மொத்த 2.13 கோடி கார்டுதாரர்களில 20 சதவீதம் பேர் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது என சுட்டி காட்டியது.

 

ரேஷன் கடைகளையும் திறந்து கொரோனா நிவாரணத் தொகையையும் வழங்குகிறோம் என்று கூறினால் மக்கள் வாங்காத பணத்தை வாங்க வெளியே வருவார்கள். மேலும் அட்டைதாரர்கள் அல்லது அவர்களின் பெயரில் பலர் வெளியே வீடுகளை விட்டு வருவார்கள்.

 

இதனால் மக்கள் கூட்டம் கூடாதா? கொரோனா மேலும் பரவாதா? கொரோனா உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் நிலையில் ஏன் இந்த மாதிரியான செயல்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

கொரோனா பரவலை தடுக்க வேண்டுமெனில் இந்த மாதத்திற்கான நிவாரணத்தொகை வாங்காதவர்கள் அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தால் மட்டுமே பரவலை தடுக்க முடியும். அப்பொழுதுதான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஊரடங்கு பின்பற்ற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.