தங்கத்தின் மதிப்பில் 90% வரை கடன் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இப்போது தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கே கடன் அளிக்கப்பட்டு வருகிறது
இதனால் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறுவர். இது மட்டும் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதாவது,
வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும்.தங்கத்தின் மதிப்பிற்கு நிகராக வழங்கப்படும் கடன் அளவை 75% இருந்து 90% வரை வங்கிகள் அதிகரித்துக் கொள்ள அனுமதி.
மேலும் பெரு நிறுவனங்கள். சிறு. குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் மறு சீரமைப்பு திட்டம். ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையும் கடன் தவணை நிறுத்தி வைப்பு திட்டம் நீட்டிக்கப்பட வில்லை.
கொரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்ட தாக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டிலும் குறைவாகவே இருக்கும்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு தல ரூ. 5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரச்சினையால் நாட்டின் பொருள்கள், சேவைகளுக்கான வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
இதுபோன்ற பல முக்கிய அறிவிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.