தள்ளாட்டத்தில் பங்குச்சந்தை!!

0
151

ஆகஸ்ட் மாதத்தின் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை நாள் முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்தது.

இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15.12 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான நிப்டி 13.90 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களை நீட்டிக்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

உலகளாவிய பங்குச் சந்தைகளும் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது சென்செக்ஸ் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஒரு குறிப்பிட்ட வரம்புகுள்ளேயே இருந்து வந்தன.

மேலும் கொரோனா தோற்று பரவல் அதிகரிப்பு முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Previous articleஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்
Next articleரூபாய் மதிப்பு உயர்வு!