ஆகஸ்ட் மாதத்தின் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை நேர்முகத்துடனே சென்று கொண்டிருக்கிறது.
தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.51புள்ளிகள் ஏற்றம். அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான 56.10 புள்ளிகள் உயர்ந்தது.
உலகளாவிய சந்தைகள் எழுச்சி பெற்றிருந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருகின்றனர்.
இவை சாதகமாக இருந்ததால் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் எழுச்சி பெற்றதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ், நிஃப்டி ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், விலை குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
L&T, HDFC மற்றும் ICIC BANK பங்குகள் வெகுவாக உயர்ந்து சந்தை எழுச்சி பெற காரணமாக இருந்தன என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன, அதுமட்டுமல்லாமல் பார்மா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மற்ற துறை பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு மட்டுமே கிடைத்தது