பங்குச் சந்தை திடீர் பல்டி!

0
129

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான 335 சென்செக்ஸ் புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 100.70 புள்ளிகளில் குறைந்தது.

பங்குச்சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் முடிந்தது இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வர்த்தகம் நேர்மையுடன் தொடங்கியது. ஆனால் பிற்பகலில் வங்கி நிதி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

இதனால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

இருப்பினும் வங்கி நிதி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது சரிவுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous article7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம்
Next articleஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை