இன்று தங்கத்தின் விலை சற்று சரிவு! உடனே முந்துங்கள் கடைகளில் அலைமோதும் கூட்டம்!

0
163
Today the price of gold has fallen slightly! Get ahead of the crowds in the shops!
Today the price of gold has fallen slightly! Get ahead of the crowds in the shops!

இன்று தங்கத்தின் விலை சற்று சரிவு! உடனே முந்துங்கள் கடைகளில் அலைமோதும் கூட்டம்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்தனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது.

கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது முடிந்த பொங்கல் பண்டிகை வரை தங்கத்தின் விலை அதிகரித்து தான் வருகின்றது.கடந்த வாரங்களில் சற்று குறைய தொடங்கியது ஆனால் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ 480 உயர்ந்து 43,800 க்கு விற்பனையானத.ஒரு கிராமுக்கு ரூ 60 உயர்ந்து ரூ 5745 விற்பனையானது. மேலும் வெள்ளியின் விலையும் ஒரு கிலோவிற்கு ரூ 1300 உயர்ந்து 77,300 க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஒரு கிராமிற்கு ரூ 65 சதவீதம் குறைந்து ஒரு சவரனுக்கு ரூ 520 குறைந்துள்ளது.இன்று ஒரு சவரன் ரூ 43,520 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் கடந்த பத்து நாட்களில் ஒரு பவுக்கு ரூ 760 உயர்ந்துள்ளது.ஒரே மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ 3 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K