இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.65 லட்சத்தை தாண்டியது!

0
191

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,65,864 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,172 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 75,062 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 72,939. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 34,71,783 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 77.7% ஆக குறைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.68% ஆக குறைந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 9,19,018 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,29,756 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 5,29,34,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளித்தாரா?
Next articleஒரு சிட்டிகை பால்பெருங்காயத்தூளில் இவ்வளவு நன்மைகளா!