இந்தியாவில் ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா; 1,114 பேர் உயிரிழப்பு!

0
135

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,54,356 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,114 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 78,586 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 78,399. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 37,02,592 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 9,73,175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,71,702 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 5,62,60,928 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!
Next articleசிறிதளவு மாற்றத்துடன் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரங்கள் :?