இந்தியாவில் 80 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

0
156

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,46,428 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,136 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 77,512. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 37,80,108 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 9,86,598 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,78,500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 5,72,39,428 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்!
Next article“ஸ்டாலின் மத்திய அரசைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்”: நாங்கள் “நீட்”டை ஆதரிக்கிறோம் என அண்ணாமலை ஆவேசம்!