இந்தியாவில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கொரோனா; 1,054 பேர் உயிரிழப்பு!

0
217

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,30,237 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,054 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 79,292. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 38,59,399 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,72,845 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 5,83,12,273 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleHappy Engineers Day! பொறியாளர் தினம்!
Next article#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here