இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76472 பேருக்கு கொரோனா தொற்று

0
140

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,021 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 65,050 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 26,48,999 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக 7,52,424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,28,761 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 4,04,06,609 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா? கடுப்பான ரசிகர்கள்! 
Next articleஇன்று (29.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?