இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்: 1,053 பேர் உயிரிழப்பு!

0
211

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 74,903 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,62,483 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,053 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 88,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,01,468 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 44,97,867 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,33,185 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 6,53,25,779 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleபோதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!
Next article#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here