இந்தியாவில் ஒரே நாளில் 86,508 பேர் பாதிப்பு: 1,129 பேர் உயிரிழப்பு!

0
196

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,129 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 91,149 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 87,374 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 46,74,984 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 9,66,382 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,56,569 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 6,74,96,031 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous article2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி: அதிகாரிகள் தகவல்!
Next articleதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி. வெங்கிடு கொரோனா தொற்றால் காலமானார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here