இந்தியாவில் இதுவரை 82.58% பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை!

0
116

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,74,703 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,039 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 95,542 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74,893 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 50,16,520 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 82.58% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 9,62,640 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,09,394 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 7,19,67,230 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஇத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா! 
Next articleகூட்டணி அமைக்க உள்ள இந்தியா-ஜப்பான்! சீனாவை புறக்கணிக்க உலக நாடுகள் செய்த மாஸ்டர் பிளான்!