இந்தியாவில் ஒரே நாளில் 819 பேர் பலி: 69921 பேருக்கு கொரோனா தொற்று!!

0
125

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 68,921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,91,167 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 819 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 28,39,883 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்றைய தேதியில் 7,85,996 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,16,920 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 4.33 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleமன்கட் முறையை ஆதரிக்கும் இந்திய முன்னாள் வீரர்?
Next articleஓணம் பண்டிகை இப்படி கொண்டாடிய கீர்த்தி!! அதிர்ந்த ரசிகர்கள்!