இந்தியாவில் ஒரே நாளில் 1096 பேர் பலி; 83341 பேருக்கு கொரோனா தொற்று!!

0
118

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,748 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,096 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 68,472 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 66,659. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 30,37,151 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 8,31,124 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,69,765 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 4,66,79,145 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleஅண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள் முடிகிறது!!
Next articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : அதிர்ச்சி தோல்வி அடைந்த நட்ச்சத்திர வீராங்கனை