தமிழகத்தில் புதிதாக 5776 பேருக்கு கொரோனா; 89 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

0
125

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 89 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,925 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,930 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 4,10,116 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 80,503 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 53,79,011 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,603 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 16 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,878 ஆக உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,052 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,28,580 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,145 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleமத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1565 பணியிடங்கள்
Next articleசளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்!