தமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் பாதிப்பு; 70 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

0
200

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 70 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,554 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 46,306 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 80,465 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 71,81,125 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 1,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,64,744 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 13 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3,179 ஆக உள்ளது.

Previous article68 செவிலியர் பணிகள் – நேரடி நியமனம்
Next articleஇந்த ராசிக்காரர்கள் புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்! இன்றைய ராசி பலன் 29-09-2020 Today Rasi Palan 29-09-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here