தமிழகத்தில் இன்று 91 பேர் பலி; 5956 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் இன்று 91 பேர் பலி; 5956 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

Parthipan K

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 91 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,008 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,68,141 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,597 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இன்று ஒரே நாளில் 19 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,729 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து 1,19,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.