தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

0
143

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,334 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,92,507 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,720 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 12 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 51,633 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 83,699 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 51,30,741 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Previous articleசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்
Next articleஉலக பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் இவருக்கா?