இந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 86 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

0
138

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,23,179 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,089 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 69,561 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 70,072. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 31,07,223 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 8,46,395 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,59,346 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 4,77,38,491 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous article“பாஜக என்ற பெரிய கட்சிக்குள் ரஜினி வந்தால் எதுவும் மாறாது” பாஜக நிர்வாகியின் அதிரடி விளாசல்
Next articleஉலகிலேயே அதிகமான இந்தியாவின் மொத்த கடன் தொகை!!: பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்த அறிக்கையால் அச்சம்!!